உவாட்ச்டவர் லைப்ரரி
உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய
உவாட்ச்டவர் லைப்ரரி தானாகவே அப்டேட் செய்துகொள்வதுபோல் செட்டிங்கை வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் புதிதாக வந்த பிரசுரங்களையோ கட்டுரைகளையோ அப்டேட் பேக்கேஜ் ஃபைலை டவுன்லோட் செய்து நீங்களாகவே அப்டேட் செய்துகொள்ளலாம்.
தானாகவே அப்டேட்களை டவுன்லோட் செய்ய
உவாட்ச்டவர் லைப்ரரி தானாகவே அப்டேட் செய்துகொள்வதுபோல் செட்டிங்கை வைக்க கீழே சொல்லியிருப்பதுபோல் செய்யுங்கள்.
உவாட்ச்டவர் லைப்ரரியில் லைப்ரரி என்ற மெனுவை கிளிக் செய்து பண்புகள் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் லைப்ரரியின் பண்புகள் என்ற பெட்டியை நீங்கள் பார்ப்பீர்கள்.
லைப்ரரியின் பண்புகள் என்ற பெட்டியில் அப்டேட்கள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அப்டேட்களை தானாகவே பதிவிறக்கம் செய் என்ற பெட்டியை டிக் செய்யுங்கள்.
புதிதாக அப்டேட் வரும்போதெல்லாம் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்புகிறீர்களா என்று ஒரு மெசேஜ் வரும். உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் ஆம் என்று கிளிக் செய்யுங்கள்.
உவாட்ச்டவர் லைப்ரரியை நீங்களாகவே அப்டேட் செய்ய
உவாட்ச்டவர் லைப்ரரியை நீங்களாகவே அப்டேட் செய்ய, அப்டேட் பேக்கேஜை பயன்படுத்தலாம். புதிதாக வந்திருக்கிற அப்டேட் பேக்கேஜ் உங்களுக்கு வேண்டுமென்றால் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்ட உவாட்ச்டவர் லைப்ரரியில் இருந்து எக்ஸ்போர்ட் (export) செய்துகொள்ளலாம். அப்படி இல்லையென்றால் இதே பக்கத்தில் இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அப்டேட் பேக்கேஜை எக்ஸ்போர்ட் (export) செய்ய
அப்டேட் பேக்கேஜை உருவாக்க கீழே சொல்லியிருப்பதுபோல் செய்யுங்கள்:
உவாட்ச்டவர் லைப்ரரியில் உதவி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பிறகு, நீங்களாக அப்டேட் செய்யும் பேக்கேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் பேக்கேஜை உருவாக்கு என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டரில் எந்த இடத்தில் அப்டேட் பேக்கேஜை சேவ் (save) பண்ண வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அந்த இடத்தை தேர்வு செய்து சேவ் (save) பட்டனை கிளிக் செய்யுங்கள். அப்போது உவாட்ச்டவர் லைப்ரரி, ”.updatepkg“ என்ற பெயரில் முடியும் ஒரு ஃபைலை உருவாக்கும்.
அப்டேட் பேக்கேஜை டவுன்லோட் செய்ய
உங்கள் மொழியில் உவாட்ச்டவர் லைப்ரரி அப்டேட் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள கீழே இருக்கிற பட்டனை கிளிக் செய்யுங்கள். அப்படியிருந்தால், அந்த ஃபைலை உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் (save) பண்ண கம்ப்யூட்டரில் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
அப்டேட் பேக்கேஜை பொருத்த
அப்டேட் பேக்கேஜை பயன்படுத்தி நீங்களாகவே உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய, கீழே கொடுத்திருப்பதுபோல் செய்யுங்கள்:
உவாட்ச்டவர் லைப்ரரியில் உதவி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அடுத்து, நீங்களாக அப்டேட் செய்யும் பேக்கேஜ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் பேக்கேஜை பொருத்து என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அப்டேட் பேக்கேஜை பொருத்தவும் என்ற பெட்டியில் ”.updatepkg“ என்ற பெயரில் முடியும் ஃபைல் இருக்கும் இடத்துக்கு போய், அதை தேர்வு செய்த பின்பு ஓப்பன் (open) என்ற பட்டனை கிளிக் செய்தால், உவாட்ச்டவர் லைப்ரரி அப்டேட் ஆகிவிடும்.