Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஜெபத்தைக் கேட்கிற” இறைவன், நம்முடைய ஜெபத்தைக் கேட்க ஆசையாக இருக்கிறார். —சங்கீதம் 65:2

இறைவனின் ஆசிக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்

இறைவனின் ஆசிக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்

இறைவன் மனிதர்களுக்கு அருமையான ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார். அதுதான் ஜெபம். ஜெபத்தில் நம்மால் இறைவனிடம் பேசவும் முடியும், மனதில் இருப்பதைக் கொட்டவும் முடியும். தாவூத் நபி தன்னுடைய ஜெபத்தில், “ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்” என்று சொன்னார். (சங்கீதம் 65:2) நாம் செய்யும் ஜெபத்தை இறைவன் கேட்க வேண்டும் என்றால், கேட்டு நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

தாழ்மையாக, இதயத்திலிருந்து ஜெபம் செய்யுங்கள்

உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் ஜெபத்தில்தான் இறைவனிடம் ஊற்ற முடியும். (சங்கீதம் 62:8) அதாவது, உள்ளத்தில் இருக்கும் உங்கள் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கொட்ட முடியும். இப்படி இதயத்திலிருந்து நீங்கள் செய்யும் ஜெபம், எல்லாம் வல்ல இறைவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இறைவனுடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்யுங்கள்

இறைவனுக்கு நிறைய சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன. ஆனாலும், அவருக்கென்று ஒரேவொரு பெயர்தான் இருக்கிறது. “நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (ஏசாயா 42:8) யெகோவா என்ற பெயர் இறைவேதத்தில் 7,000-க்கும் அதிகமான தடவை இருக்கிறது. நிறைய நபிமார்கள், இறைவனுடைய இந்தப் பெயரைச் சொல்லி ஜெபம் செய்திருக்கிறார்கள். “யெகோவாவே, தயவுசெய்து . . . நான் பேசுவதை இன்னும் கொஞ்சம் கேளுங்கள்” என்று இப்ராஹீம் நபி சொன்னார். (ஆதியாகமம் 18:30) நாமும்கூட இறைவனுடைய பெயரைச் சொல்லி, அதாவது யெகோவா என்ற பெயரைச் சொல்லி, ஜெபம் செய்ய வேண்டும்.

உங்களுடைய சொந்த மொழியில் ஜெபம் செய்யுங்கள்

நாம் எந்த மொழியில் பேசினாலும், நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் இறைவன் புரிந்துகொள்வார். இறைவன் “பாரபட்சம் காட்டாதவர் . . . , அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று அவருடைய வேதம் நம்பிக்கைக் கொடுக்கிறது.—அப்போஸ்தலர் 10:34, 35.

இறைவனுடைய ஆசையைப் பெற்றுக்கொள்வதற்கு ஜெபம் மட்டும் போதாது. இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.