பைபிளின் கருத்து
உலகம் அழியுமா?
கடவுள் எதுக்காக இந்த உலகத்தை படைச்சார்?
‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்த. . . தேவனாகிய [யெகோவா] நானே.’ —ஏசாயா 45:18.
மக்கள் என்ன சொல்றாங்க?
பூமி தானாவே வந்ததுனு நிறைய பேர் சொல்றாங்க. கடவுள் இந்த பூமியில மனுஷங்களை படைச்சு, அவங்க நல்லவங்களா கெட்டவங்களானு சோதிச்சு பார்க்கிறார்னு சில மதங்கள்ல சொல்லித்தறாங்க. நல்லவங்கள பரலோகத்துக்கு கூட்டிட்டு போவார்னும், கெட்டவங்கள நரகத்தில போடுவார்னும் சொல்றாங்க.
பைபிள் என்ன சொல்லுது?
“தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் [அதாவது, படைத்தார்]”னு பைபிள் சொல்லது. (ஆதியாகமம் 1:1) அப்புறம், ஆதாம்-ஏவாளை படைச்சு, அவங்ககிட்ட இப்படி சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) அவங்க இந்த முழு பூமியையும் ஒரு தோட்டம் மாதிரி மாத்தனும்னு கடவுள் ஆசைப்பட்டார். மக்கள் சாகாம எப்பவும் வாழனும்னுதான் அவர் நினைச்சார். அவருக்கு கீழ்ப்படியலனாதான் அவங்க இறந்துடுவாங்கனு சொன்னார்.—ஆதியாகமம் 2:17.
உலகம் அழியப் போகுதா?
“தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.”—சங்கீதம் 104:5, ஈஸி டு ரீட் வர்ஷன்.
மக்கள் என்ன சொல்றாங்க?
உலகம் அழியப் போகுதுனு நிறைய விஞ்ஞானிகள் சொல்றாங்க. இயற்கை சக்திகளே உலகத்தை அழிச்சிடும்னு நினைக்கிறாங்க. இல்லனா, யாருமே வாழ முடியாத ஒரு இடமா இந்த பூமி மாறிடும்னு நினைக்கிறாங்க. உதாரணமா, பெரிய விண்கற்கள் பூமியை தாக்கும், எரிமலை வெடிச்சு பூமி நாசமாயிடும், பனிக்கட்டி எல்லாம் உருகி பூமி தண்ணியில மூழ்கிடும், சூரியனோட ஆயுள் முடிஞ்சிடும்னு நினைக்கிறாங்க. அணு ஆயுத போர் மூலமா, இல்லனா விஷக்கிருமிகள் மூலமா மனுஷனே இந்த உலகத்தை அழிச்சிடுவான்னு சிலர் நினைக்கிறாங்க.
பைபிள் என்ன சொல்லுது?
கடவுள் இந்த பூமியை அழியறதுக்காக படைக்கல. மனுஷங்க அதில எப்பவும் வாழனும்னுதான் அவர் ஆசைப்படுறார். அதனாலதான், ‘பூமி என்றைக்கும் நிலைத்திருக்கும்’னு பைபிள் சொல்லுது. (பிரசங்கி 1:4) ‘நீதிமான்கள் பூமியை [சொந்தமாக்கிக்கொண்டு], என்றைக்கும் அதிலே [குடியிருப்பார்கள்]’னு பைபிள்ல இன்னொரு இடத்துல சொல்லியிருக்கு.—சங்கீதம் 37:29.
இதை நாம ஏன் தெரிஞ்சிக்கனும்?
நிறைய பேர், உலகம் அழிய போகுதுனு நினைச்சு இந்த பூமியை நாசம் பண்றாங்க. வாழப் போறது கொஞ்ச நாள்தான்; அதனால இருக்கிற வரைக்கும் ஜாலியா வாழனும்னு சிலர் நினைக்கிறாங்க. அவங்களுக்கு எதிர்கால நம்பிக்கை இல்லாததுனால, இஷ்டப்படி வாழ்றாங்க, அவங்க வாழ்க்கையையே வீணாக்கிடுறாங்க. ஆனா, இந்த பூமியில நாம எப்பவும் வாழப் போறோம்னு புரிஞ்சிக்கிட்டா, எதை செஞ்சாலும் எதிர்காலத்தை மனசுல வெச்சு செய்வோம். அப்படி செஞ்சாதான் நாமளும் சந்தோஷமா இருப்போம்; நம்ம குடும்பமும் சந்தோஷமா இருக்கும்.
நல்லவங்க எல்லாம் பரலோகத்துக்கு போவாங்களா?
“வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.”—சங்கீதம் 115:16.
மக்கள் என்ன சொல்றாங்க?
நல்லவங்க எல்லாம் பரலோகத்துக்கு போவாங்கனு நிறைய பேர் சொல்றாங்க.
பைபிள் என்ன சொல்லுது?
கடவுள் பரலோகத்தில இருக்கார். மனுஷங்களை பூமியில வாழனும்னுதான் படைச்சார். எதிர்காலத்திலயும் மக்கள் பூமியில வாழ்வாங்கனு பைபிள் சொல்லுது. (எபிரெயர் 2:5) அப்படினா யாருமே பரலோகத்துக்கு போக மாட்டாங்களா? பரலோகத்துக்கு போன முதல் மனுஷன் இயேசு கிறிஸ்து. இன்னும் சிலர் பூமியில இருந்து பரலோகத்துக்கு போவாங்கனு பைபிள் சொல்லுது. அவங்க, “ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்”னு சொல்லுது.—வெளிப்படுத்துதல் 5:9, 10; லூக்கா 12:32; யோவான் 3:13.
இதை நாம ஏன் தெரிஞ்சிக்கனும்?
நல்லவங்க எல்லாருமே பரலோகத்துக்கு போவாங்கனு பைபிள் சொல்லல. மனுஷங்க பூமியில வாழனும்னுதான் கடவுள் ஆசைப்படுறார். மனுஷங்க இந்த பூமியில எப்பவும் வாழ்வாங்கனு பைபிள்ல நிறைய இடத்துல சொல்லியிருக்கு. “கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்”னு பைபிள்ல கடவுளே சொல்றார். (சங்கீதம் 37:34) எல்லாருமே பரலோகத்துக்கு போயிட்டா கடவுள் சொன்னது பொய்யாயிடுமே! ▪ (g14-E 12)