Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 1

சந்தோஷமான செய்தி-அது என்ன?

சந்தோஷமான செய்தி-அது என்ன?

1. என்ன சந்தோஷமான செய்தியை கடவுள் சொல்லியிருக்கிறார்?

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார், அதனால்தான் இந்தப் பூமியைப் படைத்தார். சீக்கிரத்தில், நமக்கு இருக்கிற எல்லா கஷ்டங்களையும் தீர்க்கப்போகிறார். நம் எல்லாரையும் நன்றாக வாழ வைக்கப்போகிறார்.​—எரேமியா 29:11-ஐ வாசியுங்கள்.

கொலை, கொள்ளை, வியாதி, மரணம் ஆகியவற்றை எந்த ஆட்சியாலும் ஒழிக்க முடியவில்லை. ஆனால் கவலைப்படாதீர்கள், சீக்கிரத்தில் கடவுளுடைய ஆட்சி வரப்போகிறது. அப்போது மனிதர்களுடைய ஆட்சிக்கு கடவுள் முடிவுகட்டப் போகிறார். அவருடைய ஆட்சியில் எல்லாரும் நிம்மதியாக, ஆரோக்கியமாக இருப்பார்கள். இதுதான் கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி.​—ஏசாயா 25:8; 33:24-ஐயும் தானியேல் 2:44-ஐயும் வாசியுங்கள்.

2. இந்த சந்தோஷமான செய்தியை இப்போதே தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

கெட்டவர்கள் எல்லாரையும் கடவுள் அழித்த பிறகுதான் நம் கஷ்டங்கள் தீரும். (செப்பனியா 2:3) அப்படியென்றால், கடவுள் அவர்களை எப்போது அழிப்பார்? அவர்களை அழிப்பதற்கு முன்பு இந்த உலகத்தின் நிலைமை ரொம்ப மோசமாக ஆகும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சொன்னபடியே இன்று இந்த உலகம் ரொம்ப மோசமாக இருக்கிறது. சீக்கிரத்தில் கடவுள் கெட்டவர்களை அழிக்கப்போகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது.​—2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசியுங்கள்.

3. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

பைபிளைப் படித்து கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு அன்பான அப்பா தன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தை போன்றதுதான் பைபிள். இன்றே சந்தோஷமாக வாழ்வதற்கும் எதிர்காலத்தில் சாவே இல்லாமல் வாழ்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிப்பது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக பைபிளைப் பற்றி கற்றுக்கொள்வதை நிறுத்திவிடாதீர்கள். கடவுள் தரப்போகிற அருமையான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்!​—நீதிமொழிகள் 29:25-ஐயும் வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐயும் வாசியுங்கள்.